உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரவிந்தர் நினைவு தினத்தையொட்டி ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி

அரவிந்தர் நினைவு தினத்தையொட்டி ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி

புதுச்சேரி : அரவிந்தர் நினைவு தினத்தையொட்டி, அரவிந்தர் ஆசிரமத்தில் உள்ள, அவரது சமாதியில் ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்.மகான் அரவிந்தர் 1872 ஆகஸ்ட் 15ம் தேதி கல்கத்தாவில் பிறந்தார். ஏழு வயதில் அவர் கல்விக்காக இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். லண்டன் செயின்ட் பால் பள்ளியிலும், கேம்பிரிட்ஜ் கிங்ஸ் கல்லுாரியிலும் படித்தார். 1893ல் நாடு திரும்பினார்.ஆன்மிகத்தின் மீது ஏற்பட்ட ஈடுபாடு காரணமாக, 1910ம் ஆண்டு புதுச்சேரி வந்தார். இங்கு, அரவிந்தர் ஆசிரமத்தை உருவாக்கினார். உள் ஆன்மிக வாழ்க்கைக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார்.புதுச்சேரியில் நாற்பது ஆண்டுகளில் அவர் ஒரு புதிய ஆன்மிக பயிற்சியை உருவாக்கினார். அதை அவர் ஒருங்கிணைந்த யோகா என்று அழைத்தார். அரவிந்தரின் ஆன்மிக வழியில் ஈர்க்கப்பட்டு உலகம் முழுவதும் உள்ள சீடர்கள் அவ்வழியை பின்பற்றினர்.அவர், 1950ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி மறைந்தார். அவரது நினைவு தினமான நேற்று, அரவிந்தர் ஆசிரமத்தில் உள்ள, அவரது சமாதியில் மலரஞ்சலி செலுத்த, ஏராளமான பொதுமக்கள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து மலரஞ்சலி செலுத்தினர். காலை 6:00 மணி முதல் 6.30 மணி வரை கூட்டு தியானம் நடந்தது. இரவு 7:00 மணி வரை சமாதியை தரிசனம் செய்ய, பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை