உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சோலார் மின் திட்டம் குறித்து விழிப்புணர்வு முகாம்

சோலார் மின் திட்டம் குறித்து விழிப்புணர்வு முகாம்

புதுச்சேரி: சூரிய வீடு மின்சார திட்டம் குறித்து நெட்டப்பாக்கத்தில் நாளை (13ம் தேதி) விழிப்புணர்வு முகாம் நடக்கிறது. பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தின் நன்மைகள் குறித்து மின்துறை சார்பில், விழிப்புணர்வு முகாம், நெட்டப்பாக்கம் சத்தியபாமா மஹாலில் நாளை (13ம் தேதி) காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது. இத்திட்டத்தின் மூலம், வீட்டு மேற்கூரையில் சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு, 1 கிலோவாட்டுக்கு 40 ஆயிரம் ரூபாயும், 2 கிலோ வாட்டுக்கு 80 ஆயிரம் ரூபாயும், அதற்கு மேல் உள்ள கிலோ வாட்டுக்கு 1 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் மானியமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து வழங்குகின்றன. இத்திட்டத்தில் பொதுமக்கள் சேர்ந்து பயனடையுமாறு புதுச்சேரி செயற்பொறியாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை