உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி - கடலுார் சாலையில் இன்று போக்குவரத்து மாற்றம்

புதுச்சேரி - கடலுார் சாலையில் இன்று போக்குவரத்து மாற்றம்

புதுச்சேரி; புதுச்சேரி நைனார்மண்டம் கோவில் கும்பாபிேஷகத்தையொட்டி இன்று காலை கடலுார் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.இதுகுறித்து புதுச்சேரி போக்குவரத்து எஸ்.பி., செல்வம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரி - கடலுார் சாலையில், நைனார்மண்டத்தில் அமைந்துள்ள நாகமுத்துமாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம் இன்று (6ம் தேதி) காலை நடக்கிறது. அதனையொட்டி, பக்தர்களின் வசதிக்காக இன்று காலை 6:00 மணி முதல் புதுச்சேரி - கடலுார் சாலையில் மரப்பாலம் முதல் முருங்கப்பாக்கம் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.அதில் கடலுாரில் இருந்து புதுச்சேரிக்கு வரும் பஸ் உள்ளிட்ட கனரக மற்றும் நடுத்தர வாகனங்கள் தவளக்குப்பம் சந்திப்பில் மேற்கு பக்கம் திரும்பி அபிேஷகப்பாக்கம், கரிக்கலாம்பாக்கம், வில்லியனுார் சென்று அங்கிருந்து விழுப்புரம் சாலை, இந்திரா சதுக்கம் வழியாக பஸ் நிலையம் செல்ல வேண்டும்.புதுச்சேரியில் இருந்து கடலுார் செல்லும் வாகனங்கள் பஸ் நிலையத்தில் இருந்து வெங்கட சுப்ப ரெட்டியார் சதுக்கத்தில் 'யூ' வளைவில் திரும்பி இந்திரா சதுக்கம், வில்லியனுார், கரிக்கலாம்பாக்கம், அபிேஷகப்பாக்கம், தவளக்குப்பம் வழியாக செல்ல வேண்டும்.புதுச்சேரியில் இருந்து கடலுாருக்கும், கடலுாரில் இருந்து புதுச்சேரிக்கு வரும் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட இலகு ரக வாகனங்கள் முருங்கப்பாக்கம் சந்திப்பில் இடது பக்கம் திரும்பி கொம்பாக்கம் அரவிந்தர் நகர், வழியாக வேல்ராம்பேட் ஏரிக்கரை ரோடு, மரப்பாலம் வழியாக புதுச்சேரி செல்ல வேண்டும்.புதுச்சேரியில் இருந்து கடலுார் மார்க்கம் செல்லும் இலகு ரக வாகனங்கள் மரப்பாலம் சந்திப்பில் வலது பக்கம் திரும்பி, வேல்ராம்பேட் ஏரிக்கரை ரோடு, அரவிந்தர் நகர், கொம்பாக்கம், முருங்கப்பாக்கம் வழியாக கடலுார் சாலைக்கு செல்ல வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி