உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி - கடலுார் சாலையில் இன்று போக்குவரத்து மாற்றம்

புதுச்சேரி - கடலுார் சாலையில் இன்று போக்குவரத்து மாற்றம்

புதுச்சேரி: புதுச்சேரி - கடலுார் சாலையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி, நோணாங்குப்பம் பாலத்தில் பராமரிப்பு பணி காரணமாக இன்று இரவு 10:00 மணி முதல் நாளை காலை 6:00 வரை, புதுச்சேரி - கடலுார் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி புதுச்சேரியில் இருந்து கடலுார் நோக்கி செல்லும் வாகனங்கள் அரும்பாத்தபுரம் பைபாஸ் வழியாகவும், கடலுாரில் இருந்து புதுச்சேரி நோக்கி செல்லும் வாகனங்கள் தவளகுப்பத்தில் திரும்பி பைபாஸ் வழியாக செல்ல அறிவுறுத்தப்படுகிறது இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ