உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கனமழைக்கு பள்ளி வளாகத்தில் மரம் விழுந்ததால் பரபரப்பு

கனமழைக்கு பள்ளி வளாகத்தில் மரம் விழுந்ததால் பரபரப்பு

புதுச்சேரி: வம்புப்பட்டு அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் இருந்த பழமையான மரம் கனமழை காரணமாக விழுந்ததால் பரபரப்பு நிலவியது. திருபுவனை தொகுதி, வம்புப்பட்டு அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் இருந்த பழமையான மரம் ஒன்று, இன்று (நவ.,25) பெய்த தொடர் கனமழையின் காரணமாக திடீரென வேருடன் சாய்ந்தது. அப்போது, பள்ளி மாணவர்கள் அனைவரும் வகுப்பறைக்குள் இருந்ததால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. தகவலறிந்த திருக்கனுார் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று, பள்ளி வளாகத்தில் விழுந்த மரத்தினை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !