மேலும் செய்திகள்
பா.ஜ., தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்
09-Feb-2026
புதுச்சேரி: லாஸ்பேட்டை தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டம் திருமுருகன் திருமண நிலையத்தில் நடந்தது. கூட்டத்தில், த.வெ.க., மாநில தேர்தல் கண்காணிப்பாளர் சாமிநாதன், சட்டசபை தேர்தலை எப்படி எதிர்கொள்வது, பூத் கமிட்டியை எவ்வாறு வலுவாக்குவது மற்றும் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கான பல்வேறு ஆலோசனைகள் வழங்கி பேசினார். கூட்டத்திற்கு தொகுதி தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ., பெரியசாமி, மாநில நிர்வாகிகள் புதியவன், நரேஷ்குமார், முன்னாள் ஐ.ஜி., சந்திரன், குமாரவேலு, சசிபாலன், முருகன் மற்றும் தொகுதி தலைவர்கள், அணி தலைவர்கள், மகளிரணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு தேர்தல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. முன்னதாக, லாஸ்பேட்டை பெத்துசெட்டிபேட்டையில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.
09-Feb-2026