உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  த.வெ.க., நிர்வாகிகள் ஊர்வலம்

 த.வெ.க., நிர்வாகிகள் ஊர்வலம்

புதுச்சேரி: தமிழக வெற்றி கழகத்தின் 3ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி, த.வெ.க., நிர்வாகிகள் ஊர்வலம் நடத்தினர். ஊர்வலத்திற்கு, த.வெ.க., நிர்வாகியும், முன்னாள் எம்.எல்.ஏ., சாமிநாதன் தலைமை தாங்கினார். த.வெ.க., நிர்வாகியும் முன்னாள் எம்.எல்.ஏ., பெரியசாமி , முன்னாள் ஐ.ஜி. சந்திரன், குமாரவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலத்தில் அணி தலைவர்கள், மகளிர் அணி நிர்வாகிகள், தொகுதி தலைவர்கள், தொண்டர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் த.வெ.க., கொள்கை தலைவர் காமராஜர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு, பின் ஊர்வலம் நேரு வீதி வழியாக சென்று மிஷன் வீதி மாதா கோவில் அருகில் முடிந்தது. அப்போது அனைவருக்கும் இனிப்பு மற்றும் விசில் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !