உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பள்ளி திறக்கும் முன் ஆய்வு செய்ய த.வெ.க., பிரமுகர் கோரிக்கை

 பள்ளி திறக்கும் முன் ஆய்வு செய்ய த.வெ.க., பிரமுகர் கோரிக்கை

புதுச்சேரி: பள்ளிகள் திறப்பதற்கு முன் அடிப்படை வசதிகள் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என, உழவர்கரை தொகுதி த.வெ.க., பிரமுகர் சசிபாலன் கோரிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை; புதுச்சேரியில் கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ள நிலையில், மாணவர்களின் நலன் கருதி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்ய தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பள்ளிகளில் உள்ள குடிநீர் தொட்டிகள் சுத்தமாகவும் பாதுகாப்பாக இருக்கிறதா, மின்சார சாதனங்கள் முறையாக செயல்படுகின்றனவா, கழிவறைகள் சுகாதாரமான நிலையில் பராமரிக்கப்படுகிறதா, பள்ளி வாகனங்கள் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு உள்ளதா என அனைத்து அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ