மேலும் செய்திகள்
போலீசை தாக்கிய 2 பேர் கைது
26-Apr-2025
அரியாங்குப்பம்: தனியார் கம்பெனி மேலாளரை தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர். அரியாங்குப்பம் அடுத்த பூரணாங்குப்பம் வீதியை சேர்ந்தவர் பிரதாப், 40; தனியார் கம்பெனி மேலாளர். அரியாங்குப்பம் காமராஜர் திருமண மண்டம் அருகில் நேற்று பிரதாப் நின்று கொண்டிருந்தார். அங்கு வந்த, அரியாங்குப்பம், அன்னை நகர் வெங்கடேசபெருமாள், 39; சின்ன இருசாம்பாளையம் பாலாஜி, 36, ஆகியோர் பிரதாப்பை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.புகாரின் பேரில், அரியாங்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் வழக்கு பதிந்து, வெங்கடேசபெருமாள் உட்பட இருவரை கைது செய்தார்.
26-Apr-2025