உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  2024ம் ஆண்டு வாக்காளர்களை அங்கீகரிக்க வலியுறுத்தல்

 2024ம் ஆண்டு வாக்காளர்களை அங்கீகரிக்க வலியுறுத்தல்

புதுச்சேரி: புதுச்சேரியில் 2024 பாரளுமன்ற தேர்தல் வாக்காளர்களை அங்கீகரிக்க வேண்டும் என, இ.கம்யூ., மாநில செயலாளர் சலீம் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: புதுச்சேரி மாநிலத்தில் நடந்த சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணியில் 1.3 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். 10 சதவீதம் வாக்காளர்கள் வரும் தேர்தலில் வாக்களிக்க முடியாதவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர். திருவிழா, பண்டிகை காலம், தொடர் கனமழை, சூறாவளி, புயல் ஆகியவற்றால் எஸ்.ஐ.ஆர்., பணி பூத் அதிகாரிகளால் முழுமையான பணி செய்ய முடி யவில்லை. தற்போது 1.3 லட்சம் வாக்காளர்கள் விடுபட்டுள்ளனர். இதற்கு தேர்தல் ஆணையம் என்ன பதில் சொல்லப் போகிறது. கடந்த 2024 பாரளுமன்ற தேர்தலில் வாக்காளர் பட்டியலே சரியாக இருக்கிறது. இறந்தவர்களின் பெயரை நீக்குவதற்கு பழைய நடைமுறையே போதுமானது. ஆகையால் புதுச்சேரி தேர்தல் ஆணையம் 2024ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தல் வாக்காளர் பட்டியலை அங்கீகரித்து. இறந்தவர்களின் பெயரை மட்டும் நீக்கி, 1 லட்சம் வாக்காளர்களுக்கு ஓட்டுரிமை வழங்கி, புதுச்சேரியில் தேர்தல் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை