உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / உரிமம் பெறாத கடைகளுக்கு சீல் உழவர்கரை நகராட்சி எச்சரிக்கை

உரிமம் பெறாத கடைகளுக்கு சீல் உழவர்கரை நகராட்சி எச்சரிக்கை

புதுச்சேரி: வணிக உரிமம் பெறாத கடைகள், தொழிற்சாலைகள் சீல் வைக்கப்படும் என, உழவர்கரை நகராட்சி எச்சரித்து நோட்டீஸ் விநியோகித்து வருகிறது.புதுச்சேரி நகராட்சி சட்டத்தின்படி வணிக உரிமம் பெறாமல், எந்த ஒரு வணிகம், உணவகம், தொழிற்சாலைகள், கிளினிக், நிதி நிறுவனம் நடத்த கூடாது. அப்படி உரிமம் பெறாமல் நடத்தப்படும் வணிகம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு சீல், வைப்பதற்கு நகராட்சி சட்டத்தில் வழிவகை உள்ளது. வணிக உரிமம் இல்லாமலும், புதுப்பிக்காமலும் இயங்கும் நிறுவனங்களின் பட்டியல் www.oulmun.inஎன்ற இணையதளத்தில் வெளியிடவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் கூறியதாவது; 'உழவர்கரை நகராட்சி பகுதியில் ஏற்கனவே உள்ள 1,200 கடைகள், புதிதாக 300 கடைகள் வணிக உரிமம் பெறாமல் இயங்குவதாக கவனத்திற்கு வந்துள்ளது. இந்த கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, வருகிறது. பல வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு விட்டது. ஆனாலும் உரிமம் பெறாமல் உள்ளனர். இவர்கள் 7 நாட்களுக்கள் உரிமம் பெறாவிட்டால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும்.உரிமம் பெறவதற்கான கட்டண விபரங்கள், உரிமம் பெறுவதற்கான விண்ணப்பம் இணையதளத்திலேயே பெற்றுக்கொள்ளலாம். வணிகர்கள் விண்ணப்பங்களை www.lgrams.py.gov.inஎன்ற இணையதளத்திலும் சமர்ப்பிக்கலாம்.நகராட்சி வணிக உரிமம் பெறுவதில் சிரமம் இருந்தால் ஜவகர் நகர் அலுவலகத்தில் அமைந்துள்ள ெஹல்ப் டெக்ஸ்க் அல்லது 7598171674 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கு தகவல் அனுப்பலாம். வரும் 2025-26 ஆண்டிற்கான வணிக உரிமம் புதுப்பிக்க பிப்ரவரி 28ம் தேதி கடைசி நாள். அதன் பிறகு 25 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி