உழவர்கரை ஜென்மராக்கினி அன்னை ஆலய ஆண்டு விழா
புதுச்சேரி: உழவர்கரை ஜென்மராக்கினி அன்னை ஆலயத்தின் 311ம் ஆண்டு விழா,துவங்கியது. நேற்று காலை உழவர்கரை ஜென்மராக்கினி அன்னை ஆலயத்தில் கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவில் ஏராமான கிறிஸ்துவர்கள் கலந்துகொண்டனர்.
Galleryதொடர்ந்து, இன்று (2ம் தேதி) முதல் வரும் 9ம் தேதி வரை காலை 6:30 மணிக்கு திருப்பலி, மாலை 5:30 மணிக்கு திருப்பலி மற்றும் தேர்பவனி நடக்கிறது. வரும் 10ம் தேதி காலை 7:00 மணி மற்றும் மாலை 5:30 மணிக்கு சிறப்பு திருப்பலி நடக்கிறது. இரவு 7:30 மணிக்கு ஆடம்பர தேர்பவனி நடைபெறும். ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.