மேலும் செய்திகள்
ஆயுத பூஜை - விஜயதசமி; 180 கிலோ பூசணி விற்பனை
30-Sep-2025
புதுச்சேரி : ஆயுதபூஜையன்று சாலைகளில் பூசணிக்காய் உடைக்க கூடாது என உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: புதுச்சேரியில் ஆயுத பூஜையை முன்னிட்டு பொதுமக்கள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பூஜைகள் செய்து திருஷ்டி பூசணிக்காயை சாலையில் உடைக்கின்றனர். இதனால் வாகனஓட்டிகள் அதன் மீது ஏறி வழுக்கி கீழே விழுந்து விபத்துகள் ஏற்படுகிறது. ஆயுத பூஜை கொண்டாடும் பொதுமக்கள் அனைவரும் சாலைகளில் பூசணிக்காய் உடைப்பதை தவிர்க்க வேண்டும், உடைத்த பூசணிக்காயை ஓரமாக ஒதுக்கி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறது. ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப்பொருட்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதால், நெகிழியால் ஆன அலங்காரப்பொருட்கள், மற்றும் கேரிபேக் விற்பனை மற்றும் உபயோகத்தை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட் டுள்ளது.
30-Sep-2025