உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / உழவர்கரை நகராட்சி கொசு மருந்து தெளிப்பு

உழவர்கரை நகராட்சி கொசு மருந்து தெளிப்பு

புதுச்சேரி: டெங்கு நோய் பரவுவதை தடுக்க உழவர்கரை நகராட்சி சார்பில், தொகுதி வாரியாக கொசு மருந்து அடிக்கும் பணி நடந்து வருகிறது. உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் செய்திக்குறிப்பு; வடக்கு கிழக்கு பருமழை துவங்க உள்ளதால், மழைநீர் தேங்கி அதில், கொசு உற்பத்தியாகி, டெங்கு, மலேரியா, சிக்குன் குனியா போன்ற நோய்கள் பரவ அதிக வாய்ப்புள்ளது. எனவே காலி மனைகள், அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ள குடிநீர் தேக்க தொட்டி, மொட்டைமாடி, காலியான இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்காமல் பார்த்து கொள்ள வேண்டும். வியாபார நிறுவனங்கள், ஓட்டல்கள், சாலையோர கடை வியாபாரிகள் தங்களிடம் சேரும் குப்பைகளை, வெளியில் போடாமல், மக்கும், குப்பைகள், மக்காத குப்பைகளை என தனியாக பிரித்து, குப்பைகளை சேகரிக்க வரும் ஊழியர்களிடம் கொடுக்கவும். காலிமனை வைத்திருக்கும் உரிமையாளர்கள் தங்கள் இடத்தை மண் கொட்டி சமன் செய்ய வேண்டும். அவ்வாறு பராமரிக்காமல் இருப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நகராட்சி மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் கொண்ட குழு வரும் நாட்களில் குடியிருப்பு மற்றும் வியாபார பகுதியில் ஆய்வுகள் செய்து, கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், தொகுதி வாரியாக, தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டு, கொசு மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. புகார்கள் தெரிவிக்க, நகராட்சி கட்டுப்பாட்டு அறை, 0413 - 2200382, 7598171674 வாட்ஸ் ஆப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை