உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  வியாபார நிறுவனங்களுக்கு உழவர்கரை நகராட்சி எச்சரிக்கை

 வியாபார நிறுவனங்களுக்கு உழவர்கரை நகராட்சி எச்சரிக்கை

புதுச்சேரி: உழவர்கரை நகராட்சியின் உரிமம் இல்லாமல் இயங்கி வரும் வியாபார நிறுவனங்கள் சீல் வைக்கப்படும் என, ஆணையர் அருண் அய்யாவு எச்சரித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; புதுச்சேரி நகராட்சிகள் சட்டம், 1973 பிரிவு 355ன்படி உழவர்கரை நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வியாபாரம் செய்பவர்கள் அனைவரும் நகராட்சியின் வர்த்தக உரிமம் பெற்றிருத்தல் வேண்டும். ஆனால், கள ஆய்வில் பல வர்த்தக மற்றும் வியாபார நிறுவனங்கள் நகராட்சியின் வர்த்தக உரிமம் பெறாமல் அல்லது உரிமத்தை புதுப்பிக்காமல் இயங்கி வருவது தெரியவந்துள்ளது. இது புதுச்சேரி நகராட்சிகள் சட்டம், 1973 பிரிவு 355-ன்படி தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே, நகராட்சி உரிமம் பெறாமல் அல்லது உரிமத்தை புதுப்பிக்காமல் வர்த்தகம் செய்பவர்கள் வரும் 31ம் தேதிக்குள் உழவர்கரை நகராட்சி வருவாய் பிரிவை அணுகி அல்லது இணையதளம் வாயிலாக (www.lgrams.py.gov.in) உரிய விண்ணப்பம் செய்து தங்கள் நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு வர்த்தக உரிமம் பெற அல்லது புதுப்பித்தல் வேண்டும். தவறும் பட்சத்தில் புதுச்சேரி நகராட்சிகள் சட்டம், 1973 பிரிவு 474(1)(b) கீழ் வர்த்தக உரிமம் இல்லாமல் இயங்கி வரும் வியாபார நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும். மேலும், வர்த்தக உரிமத்தை புதுப்பிக்க தவறினால் கூடுதலாக 25 சதவீதம் அபராதமாக செலுத்த நேரிடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ