உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  வி.மணவெளி செல்வ முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா

 வி.மணவெளி செல்வ முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா

வில்லியனுார்: வில்லியனுார் அடுத்த வி.மணவெளி செல் வமுத்து மாரியம்மன் கோவிலில் பூரணி, பொற்கலை உடனுறை ஐய்யனாரப்பன், சப்த கன்னிகள் மற்றும் கெங்கையம்மன் கோவில்களின் கும்பாபிஷேக நேற் று நடந்தது. கடந்த 27ம் தேதி கணபதி பூஜையுடன் விழா துவங்கியது. தொடர் ந்து 29ம் தேதி காலை கணபதி ேஹாமம், மாலை முதற்கால யாக பூஜையும், 30ம் தேதி காலை இரண்டாம் கால யாக பூஜையும், மாலை மூன்றாம் கால யாக பூஜையும் நடந்தது. நேற்று அதிகாலை 4:30 மணியளவில் நான்காம் கால பூஜையும், காலை 6:00 கடம் புறப்பாடு நிகழ்ச்சியும், காலை 6:20 மணியளவில் மூலசந்தி விநாயகர் ஆலயத்திற்கு கும்பாபிேஷகமும், அதனை தொடர்ந்து ஐய்யனாரப்பன் ஆலயம், சப்த கன்னிகள் ஆலயம் மற்றும் கெங்கையம் மன் ஆலயத்துக்கு கும்பாபிஷேகம் நடந்தது. காலை 9:10 மணியளவில் செல்வ முத்துமாரியம் மன் ஆலய கோபுரத்திற்கும் , 9:20 மணியளவில் மூலவருக்கு கும்பாபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனையும் நடந்தது. விழாவில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், எதிர்க்கட்சித் தலைவர் சிவா, திருப்பணி கமிட்டி தலைவர் ஜெயச்சந்திரன், கோவில் நிர்வாக அதிகாரி வீரபுத்திரன், ருத்திரமூர்த்தி, முன்னாள் கவுன்சிலர் மகாலிங்கம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டார். கும்பாபிஷேக விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ