உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு பள்ளியில் காய்கறி தின விழா

அரசு பள்ளியில் காய்கறி தின விழா

புதுச்சேரி: முத்தரையர்பாளையம் ஆயி அம்மாள் அரசு நடுநிலைப் பள்ளியில் காய்கறி தின விழா கொண்டாடப்பட்டது.ஆசிரியர் சிவமதி வரவேற்றர். தலைமை ஆசிரியர் பாஸ்கரராசு தலைமை தாங்கி, மாணவர்கள்,காய்கறிகள் சாப்பிடுவதால், ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கினார். பள்ளி மேலாண்மை குழு தலைவி எமல்டா ஷீலா சிறப்புரை ஆற்றினார்.தொடர்ந்து, காய்கறிகள் நன்மைகள் குறித்து, மாணவர்களுக்கு, அட்டை படங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் கீதா, சதீஷ், சின்னராசு, சரோஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை