உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாலத்தில் மின் விளக்குகள் எரியாததால் வாகன விபத்து

பாலத்தில் மின் விளக்குகள் எரியாததால் வாகன விபத்து

அரியாங்குப்பம்: இடையார்பாளையம் அருகே ஆற்றுப்பாலத்தில் மின் விளக்கு எரியாமல் இருப்பதால், வாகன விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.புதுச்சேரி - கடலுார் சாலையில், நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு பாலத்தில் மின் விளக்குகள் முழுவதும் எரியாமல் இருண்டு கிடந்தது. அதனால், இரவு நேரங்களில் பாலத்தில் வாகன விபத்துக்கள் நடந்து வந்தன. இந்நிலையில், சுண்ணாம்பாறு பாலத்தில் பழுதான மின் விளக்குகள் அனைத்தும் சமீபத்தில் சரி செய்யப்பட்டு, இரவில் ஒளிர்கின்றன. அதே வேளையில், சுண்ணாம்பாறு பாலத்தின் வடக்கு முனையில் இருந்து,, இடையார்பாளையம் வரை உள்ள பகுதியில் மின் விளக்குகள் அனைத்தும் கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக எரியாததால், அப்பகுதி இருளில் மூழ்குகிறது. இப்பகுதியில் இரண்டு சிறு பாலங்கள் உள்ளன. குறிப்பாக, அப்பகுதியில் சாலையின் இரு புறங்களிலும் மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளதால், இரவில் கும்மிருட்டாக உள்ளது. அதனால் இரவு நேரத்தில், அவ்வழியாக மோட்டார் பைக்கில் செல்பவர்கள், விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர். இப்பகுதியில் சுடுகாட்டு பாதை பிரியும் இடத்தில் சில நாட்களுக்கு முன் வாகன விபத்து ஏற்பட்டது. எனவே, இப்பகுதியில் பழுதான மின் விளக்குகளை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை