உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  கால்நடை மருத்துவர்கள் தினம் சிறப்பு ரேபிஸ் தடுப்பூசி முகாம்

 கால்நடை மருத்துவர்கள் தினம் சிறப்பு ரேபிஸ் தடுப்பூசி முகாம்

புதுச்சேரி: கால்நடை மருத்துவமனையில் நடந்த சிறப்பு முகாமில் ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டது. உலக கால்நடை மருத்துவர்கள் தினத்தையொட்டி புதுச்சேரி கால்நடை பராமரிப்பு துறை சார்பில், கால்நடைகளுக்கான இலவச மருத்துவ முகாம் மற்றும் செல்லப்பிராணிகளுக்கான இலவச நாய்க்கடி தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. புதுச்சேரி கால்நடை மருத்துவமனையில் நடந்த இந்த முகாமினை கால்நடை பராமரிப்பு துறை இயக்குநர் லதா மங்கேஷ்கர் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். இந்த சிறப்பு முகாமில், 100 நாய்களுக்கு நாய்க்கடி தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும், கால்நடைகளுக்கான சுகாதார முகாம் நடத்தப்பட்டு, அவற்றிற்கு தேவையான சிகிச்சை, பராமரிப்பு ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும், புதுச்சேரி நகராட்சியினால் 50-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு செல்லப்பிராணி உரிமங்கள் வழங்கப்பட்டன. இதனுடன், 20 செல்ல நாய்களுக்கு இனப்பெருக்க கட்டுப்பாட்டு அறுவைச் சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டன. இணை இயக்குநர் குமரன், கால்நடை மருந்தகம் பொறுப்பாளர் காந்திமதி, ராஜிவ் காந்தி கால்நடை மருத்துவ கல்லூரி பயிற்சி மாணவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ