உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கோவில் சொத்தை பாதுகாக்க கிராம மக்கள் ஆலோசனை

கோவில் சொத்தை பாதுகாக்க கிராம மக்கள் ஆலோசனை

பாகூர், : பாகூர் மூலநாதர் கோவில் சொத்துக்களை பாதுகாப்பது தொடர்பாக, கிராம மக்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.புதுச்சேரியில் கோவில் சொத்துக்களை மோசடி செய்து அபகரிக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. சமீபத்தில் காரைக்காலில் பர்வதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 8 ஏக்கர் நிலம் கூட்டு சதி மூலம் அபகரிக்கப்பட்டது. இது தொடர்பாக, காரைக்கால் சப் கலெக்டர் உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பாகூரில் உள்ள 1,400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில் சொத்துக்களை மீட்பது தொடர்பாக கிராம மக்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.கூட்டத்தில், கிராம முக்கியஸ்தர்கள் பங்கேற்று, கோவில் சொத்துக்களை பாதுகாப்பது, பராமரிப்பது குறித்து ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து, 'பாகூர் சிவன் கோவில் சொத்து பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு'குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது.அக்குழுவின் நிர்வாகிகளாக சீனுவாசன், கலியமூர்த்தி, சிவ தட்சிணாமூர்த்தி, மணிவண்ணன், கணேசன், பாவாடை, கதிரவன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ