உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  காங்., வேட்பாளர் கார்த்திகேயன் கை சின்னத்திற்கு ஓட்டு சேகரிப்பு

 காங்., வேட்பாளர் கார்த்திகேயன் கை சின்னத்திற்கு ஓட்டு சேகரிப்பு

வில்லியனுார்: ஊசுடு தொகுதி காங்., வேட்பாளராக கார்த்திகேயன், கூடப்பாக்கம் மற்றும் அதனை சுற்றி உள்ள புதிய நகர்களில் வீடு வீடாக சென்று கை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார். வேட்பாளர் கார்த்திகேயனை மலர்கள் துாவி மற்றும் ஆரத்தி எடுத்தும் பெண்கள் வரவேற்றனர். பொதுமக்களிடம் கூடப்பாக்கம்கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளான சாலைகள், நல்ல சுகாதாரமான குடிநீர், மின்விளக்கு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதாகவும், கிராமத்தில் வீடு இல்லாத ஏழைகளுக்கு இலவச மனைப்பட்டா வழங்குவேன்.கிராமமகளிர் வாழ்வில் வளம்பெற சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் வசதி ஏற்படுத்தி கொடுப்பேன் என,பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி பொதுமக்களிடம் ஓட்டு சேகரித்தார். வாக்கு சேகரிப்பின் போது, தி.மு.க., வி.சி., உள்ளிட்ட கூட்டணி கட்சிமுக்கிய நிர்வாகிகள், ஆதரவாளர்கள் திரளாக கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !