மேலும் செய்திகள்
பிஜி., கமிஷனர், மியான்மர் துாதருடன் அமைச்சர் ஆலோசனை
2 minutes ago
அரசு ஊழியர்களுக்கு 5 சதவீதம் அகவிலைப்படி உயர்வு
3 minutes ago
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி, காமராஜர் நகர், வில்லியனுார் மற்றும் உழவர்கரை தொகுதிகளில் வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்கள் இதுவரை கிடைக்கப் பெறாதவர்கள் நாளை (22ம் தேதி) மற்றும் நாளை மறுநாள் 23ம் தேதிகளில் அந்தந்த ஓட்டுச்சாவடிகளில் பெற்றுக் கொள்ளலாம். இதுகுறித்து வாக்காளர் பதிவு அதிகாரிகள் அர்ஜூன் ராமகிருஷ்ணன், புத்தி அகில் ஆகியோர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் ஒரு பகுதியாக நாளை 22ம் தேதி மற்றும் நாளை மறுநாள் 23ம் (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்) தேதிகளில் தட்டாஞ்சாவடி, காமராஜர் நகர், வில்லியனுார் மற்றும் உழவர்கரை தொகுதிகளுக்கு உட்பட்ட பி.எல்.ஓ.,க்கள் அந்தந்த ஓட்டுச்சாவடியில் இருப்பார்கள். இதுவரை, கணக்கீட்டு படிவங்களை பெறாதவர்கள் தங்கள் பகுதி ஓட்டுச்சாவடிக்கு சென்று, அங்குள்ள ஓட்டுச்சாவடி அலுவலரிடம் இருந்து படிவங்களை பெற்றுக் கொள்ளலாம்.
2 minutes ago
3 minutes ago