உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கடற்கரை சாலையில் இன்று வாக்கத்தான் நிகழ்ச்சி

கடற்கரை சாலையில் இன்று வாக்கத்தான் நிகழ்ச்சி

புதுச்சேரி: கடற்கரை சாலையில் போக்குவரத்து துறை சார்பில் வாக்கத்தான் நிகழ்ச்சி இன்று நடக்கிறது. புதுச்சேரி போக்குவரத்து துறை சார்பில், தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி, வாக்கத்தான் நிகழ்ச்சி இன்று (24ம் தேதி) நடக்கிறது.கடற்கரை சாலை காந்தி திடல் அருகே மாலை 3:00 மணிக்கு வாக்கத்தானை அரசு செயலர் முத்தம்மா, போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் ஆகியோர் துவங்கி வைக்கின்றனர். பள்ளி, கல்லுாரிகளை சேர்ந்த என்.சி.சி., மாணவ, மாணவியர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியானது காந்தி சிலை அருகே துவங்கி, எஸ்.வி.பட்டேல் சாலை, மிஷன் வீதி, சம்பா கோவில், அரசு மருத்துவமனை வழியாக சென்று, மீண்டும் காந்தி சிலையில் முடிவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை