உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  முத்திரையர்பாளையம், தனபாலன் நகரில் குடிநீர் கட்

 முத்திரையர்பாளையம், தனபாலன் நகரில் குடிநீர் கட்

புதுச்சேரி: முத்திரையர்பாளையம், தனபாலன் நகர் பகுதியில் இன்றும், நாளையும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. முத்திரையர்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இன்று 27ம் தேதியும், தனபாலன் நகர் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில் நாளை 28ம் தேதியும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால், இன்று முத்திரையர்பாளையம், மேட்டுப்பாளையம், சாணாரபேட்டை பகுதிகளிலும், நாளை காந்தி திருநல்லுார், தனபாலன் நகர், கல்கி நகர், சேரன் நகர், அகத்தியர்கோட்டம், அருணா நகர், கணபதி நகர், என்.ஆர்.ராஜிவ் நகர், வள்ளலார் நகர் மற்றும் செந்தில் நகர் பகுதிகளில் காலை 10:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை குடிநீர் விநியோகம் தடைபடும். இத்தகவலை பொதுப்பணித்துறை பொதுசுகாதார கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ