உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வேல்ராம்பட்டில் நாளை குடிநீர் கட்

வேல்ராம்பட்டில் நாளை குடிநீர் கட்

புதுச்சேரி : வேல்ராம்பட்டு, இன்ஜினியர்ஸ் காலனி மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் பராமரிப்பு பணி காரணமாக நாளை குடிநீர் விநியோகம் தடைப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, பொதுப்பணித்துறை பொதுசுகாதாரக் கோட்டம் செயற்பொறியாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: முதலியார்பேட்டை, வேல்ராம்பட்டில் உள்ள இன்ஜினியர்ஸ் காலனி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை கழுவி சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், நாளை (25ம் தேதி) மதியம் 12:00 மணி முதல் 2:00 மணி வரைவேல்ராம்பட்டு, இன்ஜினியர்ஸ் காலனி, ஜோதி நகர், ஜெயமூர்த்தி ராஜா நகர், வாரியார் நகர், ஜான்பால் நகர், காயத்ரி நகர், திருப்பூர் குமரன் நகர், எம்.ஜி.ஆர்., நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !