மேலும் செய்திகள்
பெண் மாயம்: போலீசில் புகார்
24-May-2025
அரியாங்குப்பம்: வெளியில் சென்று வருவதாக கூறி விட்டு சென்ற மனைவியை காணவில்லை என கணவர் போலீசில் புகார் செய்தார். வீராம்பட்டினம் பவானி நகரை சேர்ந்தவர் ராஜேஷ் இவரது மனைவி கமலி, 28, இவர் கடந்த 30ம் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். மாலை வரை வீட்டுக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து, அவரது கணவர் கொடுத்து புகாரின் பேரில், அரியாங்குப்பம் ஏட்டு சக்திவேல் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
24-May-2025