உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சேதமடைந்துள்ள போலீஸ் குடியிருப்புகள் அகற்றப்படுமா?

சேதமடைந்துள்ள போலீஸ் குடியிருப்புகள் அகற்றப்படுமா?

திருக்கனுார்: திருக்கனுார் போலீஸ் குடியிருப்பு சேதமடைந்து, விஷப்பூச்சிகள் புகலிடமாக மாறியுள்ளது. திருக்கனுார் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் போலீசார் குடும்பத்தினர் தங்கும் வகையில், போலீஸ் ஸ்டேஷன் பின்புறம், 4 குடியிருப்புகள் கொண்ட தனித்தனி கட்டடங்களாக 12 வீடுகளும், ஸ்டேஷன் அதிகாரிகளுக்காக 2 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இந்த குடியிருப்புகளில் ஸ்டேஷனில் பணியாற்றும் போலீசார் குடும்பத்துடன் வசித்து வந்தனர். இந்நிலையில், குடியிருப்புகள் போதிய பராமரிப்பு இல்லாததால் சேதமடைந்து, ஜன்னல், கதவு உள்ளிட்டவை உடைந்துள்ளன. செடிகள் மற்றும் புற்றுகள் வளர்ந்துள்ளதால், குடியிருப்பு முழுதும் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களில் புகலிடமாக மாறி வருவதுடன், குரங்குகளின் வசிப்பிடமாகவும் மாறியுள்ளது. இதன் காரணமாக, அரசு குடியிருப்புகளை போலீசார் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்துள்ள திருக்கனுார் போலீசாருக்கான குடியிருப்புகளை இடித்து அகற்றிவிட்டு, புதிதாக கட்டித்தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை