உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  நெஞ்சுவலி ஏற்பட்டு தொழிலாளி சாவு

 நெஞ்சுவலி ஏற்பட்டு தொழிலாளி சாவு

காரைக்கால்: காரைக்கால் நெஞ்சு வலி ஏற்பட்டு கூலி தொழிலாளி உயிரிழந்தார். காரைக்கால், திருநகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணி மகன் மதியழகன், 25; தனியார் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வருகிறார். மதியழகனுக்கு சில நாட்களாக சாப்பிட்ட முடித்த பின், வாந்தி எடுப்பது வழக்கமாக இருந்தது. பின், நெஞ்சு வலிப்பதாக தனது தாயிடம் தெரிவித்துள்ளார். ஏன் நெஞ்சு வலிக்கிறது என, தாய் கேட்டதற்கு, அவர், பங்கில் வேலை செய்வதால், பெட்ரோல் வாடை ஒத்துக்காமல் சாப்பிடும் போது வாந்தி எடுக்கப்பதாக கூறியுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் பெட்ரோல் பங்க் பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்த மதியழகனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து மதியழகன் இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து நகர போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி