உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கம்பளி சாமி மடத்தில் உலக யோகா தின விழா

கம்பளி சாமி மடத்தில் உலக யோகா தின விழா

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி கம்பளி சாமி மடத்தில், மத்திய ஆயூஷ் அமைச்சகம், இந்தியன் யோகாசன சங்கம், சித்தர் பூமி யோகாசன விளையாட்டு சங்கம் மற்றும் ஆனந்தா ஆசிரமம் சார்பில், உலக யோக தின விழா நடந்தது. நிகழ்ச்சியில் சித்தர் பூமி யோகாசன சங்க துணை தலைவர் தேவசேனா பவனானி தலைமை தாங்கினார். மூத்த துணைத் தலைவர் கஜேந்திரன், செயலாளர் தயாநிதி, இந்திய யோகாசன சங்கம் புதுச்சேரி கிளை செயலாளர் பாலாஜி, சங்க இளைஞர் அமைப்பாளர் திவ்விய பிரிய பவனானி, யோகா ஆசிரியர்கள் செநதில்குமார்,அன்பழகன் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் இந்தியன் யோகாசன சங்கம், புதுச்சேரி கிளை பொருளார் சண்முகம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !