தாகூர் அரசு கல்லுாரியில் யோகா சிறப்பு நிகழ்ச்சி
புதுச்சேரி: தாகூர் அரசு கல்லுாரிசமூகவியல் துறையில், 'யோகாவும் ஆரோக்கியமும்' தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.லாஸ்பேட்டை தாகூர் கல்லுாரி, சமூகவியல் துறையில் பயின்ற முன்னாள் மாணவர்கள் மூலம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.அதன் தொடர்ச்சியாக, முன்னாள் மாணவி சிவரஞ்சினி, 'யோகாவும், ஆரோக்கியமும்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். துறை தலைவர் எப்சிபா தலைமை தாங்கினார்.மாணவர்களுக்கு தினசரி வாழ்க்கைக்கு தேவையான சில யோகா பயிற்சியும் அளிக்கப்பட்டது. கேள்வி நேரத்தில் மாணவர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கப்பட்டது.பேராசிரியர்கள் அருள், கணேசன் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.