மேலும் செய்திகள்
சுரங்கப்பாதையில் அதிகாரிகள் ஆய்வு
09-Jan-2026
புதுச்சேரி: குட்கா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். ரங்கபிள்ளை தெருவில், பள்ளி அருகில் உள்ள கடையில் குட்கா விற்பதாக பெரிய கடை போலீசாருக்கு நேற்று மாலை தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், போலீசார் அங்கு சென்றனர். போலீசார் சோதனை நடத்தியதில் கடையில் குட்கா பாக்கெட்டுகள் வைத்து விற்றது தெரியவந்தது. அதையடுத்து, ரங்கபிள்ளை தெருவை சேர்ந்த காந்திலால், 27, என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து குட்கா பாக்கெட்டுகள், 2 மொபைல் போன்கள் மற்றும் 3 லட்சத்து 34 ஆயிரத்து 700 ரூபாய் ரொக்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
09-Jan-2026