உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கடல் அலையில் சிக்கி வாலிபர் உயிரிழப்பு

கடல் அலையில் சிக்கி வாலிபர் உயிரிழப்பு

கோட்டகுப்பம் : கோட்டக்குப்பம் அருகே ராட்சத அலையில் சிக்கிய உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.உத்திரபிரதேசம் மாநிலம், லக்னோவை சேர்ந்தவர் துருவ்,21; இவர் வேலுாரில் உள்ள தனியார் கல்லுாரியில் படிக்கிறார். பொங்கல் விடுமுறையையொட்டி துருவ், தன்னுடன் பயிலும் அபிஷேக் ,22; மணீஷ், 21; ஆகியோருடன் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்துள்ளார். ஆரோவில் மற்றும் தந்திராயன்குப்பம் கடற்கரை பகுதிகளை சுற்றி பார்த்த மூவரும் நேற்று முன்தினம் கடலில் இறங்கி குளித்தனர்.அப்போது, மூன்று பேரும் ராட்சத அலையில் சிக்கி கடலில் மூழ்கினர். இதைப்பார்த்த அங்கிருந்த இருவர், கடலில் நீந்தி சென்று, அலையில் சிக்கி தத்தளித்த மூன்று பேரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அதில், அபிஷேக், மணீஷ் ஆகிய இருவரும் உயிர் தப்பினர்.சுயநினைவின்றி இருந்த துருவ், புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்தார். கோட்டகுப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !