உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / அபிஷேக், வருண் நம்பர்-1: ஐ.சி.சி., டி-20 தரவரிசையில்

அபிஷேக், வருண் நம்பர்-1: ஐ.சி.சி., டி-20 தரவரிசையில்

துபாய்: ஐ.சி.சி., 'டி-20' தரவரிசையில் இந்தியாவின் அபிஷேக் (பேட்டர்), வருண் (பவுலர்) 'நம்பர்-1' இடத்தில் நீடிக்கின்றனர்.சர்வதேச 'டி-20' போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது.பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் அபிஷேக் சர்மா, 931 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டார். சமீபத்தில் முடிந்த ஆசிய கோப்பையில் 314 ரன் (7 போட்டி, சராசரி 44.85) குவித்த இவர், தொடர் நாயகன் விருது வென்றார். இதன்மூலம் 'டி-20' பேட்டர் தரவரிசையில் அதிக ரேட்டிங் புள்ளி பெற்ற வீரரானார் அபிஷேக். இதற்கு முன், 2020ல் இங்கிலாந்தின் டேவிட் மலான், 919 புள்ளி பெற்றிருந்தார். அதிக ரேட்டிங் புள்ளி பெற்ற இந்திய வீரர்கள் பட்டியலில் சூர்யகுமார் யாதவ் (912), விராத் கோலியை (9090 முந்தினார் அபிஷேக்.இங்கிலாந்தின் பில் சால்ட் (844), இந்தியாவின் திலக் வர்மா (819) 2, 3வது இடத்தில் உள்ளனர்.பவுலர் தரவரிசையில் இந்தியாவின் வருண் சக்ரவர்த்தி (803) முதலிடத்தில் தொடர்கிறார். ஆசிய கோப்பையில் 17 விக்கெட் கைப்பற்றிய இந்தியாவின் குல்தீப் யாதவ் (648) 21வது இடத்தில் இருந்து 12வது இடத்துக்கு முன்னேறினார். இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா (566), 41வது இடத்தில் இருந்து 29வது இடத்தை கைப்பற்றினார்.'ஆல்-ரவுண்டர்' தரவரிசையில் இந்தியாவின் ஹர்திக் பாண்ட்யா (233) 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை