வாசகர்கள் கருத்துகள் ( 3 )
அந்த காலத்திற்குள் பாகிஸ்தான் இரண்டாக உடைந்து விட்டால் என்னாகும் ?
ஹிந்துஸ்தானுக்கு போர்க்கிஸ்தானியர்கள் வரவே வேண்டாம். எந்த போர்க்கிஸ்தானியர்களும் ஹிந்துஸ்தானுக்குள் வராமல் இருப்பதே நல்லது.
நீ ஒரு ...
துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடர்பான பிரச்னையில், பாகிஸ்தான் இறங்கி வந்துள்ளது.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. ஒருநாள் தரவரிசையில் 'டாப்-8' அணிகள் பங்கேற்கும். இத்தொடர் பாகிஸ்தானில் வரும், 2025, பிப். 19-மார்ச் 9ல் நடக்க உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் சென்று விளையாட இந்தியா மறுத்துவிட்டது. இந்திய அணி பங்கேற்கும் போட்டிகளை பாகிஸ்தானுக்கு வெளியே துபாயில் நடத்த வேண்டுமென ஐ.சி.சி.,யிடம் வலியுறுத்தியது. இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு எதிர்ப்பு தெரிவித்தது.நிபந்தனை என்ன: புதிய திருப்பமாக இந்தியா பங்கேற்கும் போட்டிகளை துபாயில் நடத்திக் கொள்ள பாகிஸ்தான் சம்மதித்துள்ளது. இதே 'மாடலை' தாங்களும் பின்பற்ற அனுமதிக்க வேண்டுமென ஐ.சி.சி.,க்கு நிபந்தனை விதித்துள்ளது. வரும் 2031 வரை இந்தியாவில் நடக்க உள்ள 'டி-20' உலக கோப்பை (இலங்கையுடன் இணைந்து), 2029ல் சாம்பியன்ஸ் டிராபி, 2031ல் உலக கோப்பை (50 ஓவர், வங்கதேசத்துடன்), 2025ல் பெண்கள் உலக கோப்பை (50 ஓவர்) உள்ளிட்ட ஐ.சி.சி., தொடர்களில் பாகிஸ்தான் பங்கேற்காது. தங்களது போட்டிகளை இந்தியாவுக்கு பதில் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். தங்களுக்கான ஐ.சி.சி., ஆண்டு பங்கு தொகையை அதிகரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது. எதிர்கால தொடர்: இதில் இரு உலக தொடரை இலங்கை, வங்கதேசம் இணைந்து நடத்துவதால், அங்கு சென்று பாகிஸ்தான் விளையாடிக் கொள்ளலாம். இந்தியா வர வேண்டிய அவசியம் இருக்காது. ஆனால், 2029ல் சாம்பியன்ஸ் டிராபி, அடுத்த ஆண்டு பெண்கள் உலக கோப்பை தொடர் இந்தியாவில் மட்டும் நடக்க உள்ளன. இதில் பாகிஸ்தான் பங்கேற்பதில் பிரச்னை எழலாம். இவை எதிர்கால தொடர்கள் என்பதால், தீர்வு காண போதிய கால அவகாசம் உண்டு.தற்போதைக்கு சாம்பியன்ஸ் டிராபிக்கு பாகிஸ்தான் 'கிரீன் சிக்னல்' கொடுத்து இருப்பதால், அட்டவணை விரைவில் வெளியிடப்படலாம்.
அந்த காலத்திற்குள் பாகிஸ்தான் இரண்டாக உடைந்து விட்டால் என்னாகும் ?
ஹிந்துஸ்தானுக்கு போர்க்கிஸ்தானியர்கள் வரவே வேண்டாம். எந்த போர்க்கிஸ்தானியர்களும் ஹிந்துஸ்தானுக்குள் வராமல் இருப்பதே நல்லது.
நீ ஒரு ...