உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / கிறிஸ் வோக்ஸ் ஓய்வு: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து

கிறிஸ் வோக்ஸ் ஓய்வு: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து

லண்டன்: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இங்கிலாந்தின் கிறிஸ் வோக்ஸ் ஓய்வு பெற்றார்.இங்கிலாந்து 'ஆல்-ரவுண்டர்' கிறிஸ் வோக்ஸ் 36. கடந்த 2011ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 'டி-20', ஒருநாள் போட்டிகளின் மூலம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் காலடி வைத்தார். 62 டெஸ்ட் (192 விக்கெட், 2034 ரன்), 122 ஒருநாள் (173 விக்கெட், 1524 ரன்), 33 சர்வதேச 'டி-20' (31 விக்கெட், 147 ரன்) போட்டிகளில் விளையாடி உள்ளார்.கடைசியாக இந்தியாவுக்கு எதிரான ஓவல் டெஸ்டில் (2025, ஜூலை 31 - ஆக. 4) விளையாடினார். இப்போட்டியில் தோள்பட்டை காயத்தை பொருட்படுத்தாமல் கடைசி நாளில் ஒற்றை கையில் 'பேட்' செய்தார். சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணிக்கு வோக்ஸ் தேர்வு செய்யப்படவில்லை.இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக வோக்ஸ் அறிவித்தார். இதன்மூலம் வோக்சின், 15 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.வோக்ஸ் கூறுகையில், ''இங்கிலாந்துக்காக விளையாடியது பெரிய கவுரவம். நேற்று தான் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானது போல உள்ளது. 15 ஆண்டுகள் கடந்ததை என்னால் நம்ப முடியவில்லை. கவுன்டி போட்டியில் தொடர்ந்து விளையாடுவேன். வாய்ப்பு கிடைத்தால் உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் 'டி-20' லீக் தொடர்களிலும் பங்கேற்பேன்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை