5 பந்தில் 5 விக்கெட் * அயர்லாந்து வீரர் சாதனை
டப்ளின்: அயர்லாந்தில் 'இன்டர்-புரோவின்ஷியல்' 'டி-20' (உள்ளூர்) தொடர் நடக்கிறது. இதில் மன்ஸ்டெர் ரெட்ஸ், நார்த்-வெஸ்ட் வாரியர்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டி டப்ளினில் நடந்தது.முதலில் களமிறங்கிய மன்ஸ்டெர் அணிக்கு கேப்டன் கர்டிஸ் காம்பெர் (44), பீட்டர் மூர் (35), ஸ்வப்னில் (27), ஸ்டீபன் (27) கைகொடுக்க, 20 ஓவரில் 188/7 ரன் குவித்தது.அடுத்து விளையாடிய நார்த்-வெஸ்ட் வாரியர்ஸ் அணி ஒரு கட்டத்தில் 11 ஓவரில் 78/5 ரன் என இருந்தது. 12வது ஓவரை கர்டிஸ் காம்பெர் வீசினார். இதன் கடைசி 2 பந்தில் வில்சன் (0), கிரஹாம் (0) அவுட்டாகினர். மீண்டும் 14வது ஓவரை வீசிய கர்டிஸ், முதல் பந்தில் மெக்பிரைனை (29) அவுட்டாக்கி, 'ஹாட்ரிக்' சாதனை படைத்தார். தொடர்ந்து 2, 3வது பந்தில், மில்லர் (0), ஜோசை (0) அவுட்டாக்கினார். தொடர்ந்து 5 பந்தில் 5 விக்கெட் சாய்த்த முதல் வீரர் என, கிரிக்கெட் அரங்கில் புதிய வரலாறு படைத்தார்.நார்த்-வெஸ்ட் வாரியர்ஸ் அணி 13.3 ஓவரில் 88 ரன்னில் சுருண்டு தோற்றது. மன்ஸ்டெர் ரெட்ஸ் அணி 100 ரன்னில் வெற்றி பெற்றது. முதல் வீரர்கிரிக்கெட் அரங்கில் 5 பந்தில் 5 விக்கெட் சாய்த்த முதல் வீரர் என சாதனை படைத்தார் அயர்லாந்தின் கர்டிஸ் காம்பெர். இதற்கு முன் 2021ல் இவர், நெதர்லாந்துக்கு எதிரான 'டி-20' போட்டியில் 4 பந்தில் 4 விக்கெட் சாய்த்து இருந்தார். * தவிர, 2019ல் ரஷித் கான் (ஆப்கன்), மலிங்கா (இலங்கை), 2022ல் ஹோல்டர் (வெ.இண்டீஸ்), 2024ல் வாசீம் (லெசோதோ), ஹெர்னன் (அர்ஜென்டினா) இதுபோல, 'டி-20'ல் 4 பந்தில் 4 விக்கெட் சாய்த்துள்ளனர். * பெண்கள் கிரிக்கெட்டில் ஜிம்பாப்வேயின் கெலிஸ் (19 வயது அணி), உள்ளூர் 'டி-20' தொடரில் ஈகிள்ஸ் அணிக்கு எதிராக 5 பந்தில் 5 விக்கெட் சாய்த்துள்ளார்.