உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / ஆஸ்திரேலியா இரண்டாவது வெற்றி

ஆஸ்திரேலியா இரண்டாவது வெற்றி

கிங்ஸ்டன்: வெஸ்ட் இண்டீஸ் சென்ற ஆஸ்திரேலிய அணி ஐந்து போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா வென்றது (1-0). இரண்டாவது போட்டி கிங்ஸ்டனில் நடந்தது. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்சல் மார்ஷ், பீல்டிங் தேர்வு செய்தார். ரசல் 'சிக்சர்'வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிரண்டன் கிங் (51), கேப்டன் ஷாய் ஹோப் (9) ஜோடி துவக்கம் தந்தது. ஹெட்மயர் (14), சேஸ் (16), பாவெல் (12) ஏமாற்ற, 98/5 ரன் என திணறியது. கடைசி போட்டியில் களமிறங்கிய ஆன்ட்ரி ரசல் திவார்ஷுயிஸ் வீசிய 15வது ஓவரில் 3 சிக்சர் அடித்த ரசல், 15 பந்தில் 36 ரன் எடுத்து திரும்பினார். வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில், 172/8 ரன் மட்டும் எடுத்தது. இங்லிஸ் விளாசல்ஆஸ்திரேலிய அணிக்கு மிட்சல் மார்ஷ் (21), மேக்ஸ்வெல் (12) நிலைக்கவில்லை. பின் வந்த இங்லிஸ் (78), கேமரான் கிரீன் (56) ஜோடி அவுட்டாகாமல் இருந்து அணியை வெற்றிக்கு கொண்டு சென்றது. ஆஸ்திரேலிய அணி 15.2 ஓவரில் 173/2 ரன் எடுத்து, 8 விக்கெட்டில் வெற்றி பெற்றது. தொடரில் 2-0 என முன்னிலை பெற்றது.ரசல் 'குட்-பை'வெஸ்ட் இண்டீஸ் அணி 'ஆல்-ரவுண்டர்' ஆன்ட்ரி ரசல் 37. ஜமைக்காவை சேர்ந்த இவர், 2010ல் சர்வதேச கிரிக்கெட்டில் களமிறங்கினார். ஒரு டெஸ்ட் (2 ரன், ஒரு விக்.,), 56 ஒருநாள் (1034 ரன், 70 விக்.,), 86 சர்வதேச 'டி-20' ல் (1122 ரன், 61 விக்.,) பங்கேற்றார். கடந்த 2012, 2016ல் 'டி-20' உலக கோப்பை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியில் ரசல் இடம் பெற்றிருந்தார். தற்போது தனது சொந்தமண்ணில் நடந்த போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை