ஆஸ்திரேலியா ஐந்தாவது வெற்றி * சொந்தமண்ணில் வெ.இண்டீஸ் சோகம்
செயின்ட் கிட்ஸ்: செயின்ட் கிட்ஸ் போட்டியில் 3 விக்கெட்டில் வென்ற ஆஸ்திரேலிய அணி, வெஸ்ட் இண்டீசிற்கு எதிரான 'டி-20' தொடரை 5-0 என முழுமையாக கைப்பற்றியது.வெஸ்ட் இண்டீஸ் சென்ற ஆஸ்திரேலிய அணி, 5 போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்றது. முதல் 4 போட்டியில் ஆஸ்திரேலியா (4-0) வென்றது. ஐந்தாவது, கடைசி போட்டி செயின்ட் கிட்சில் நடந்தது. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலியா 'பீல்டிங்' தேர்வு செய்தது.ஹெட்மயர் அரைசதம்வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிரண்டன் கிங் (11), கேப்டன் ஷாய் ஹோப் (9) ஜோடி துவக்கம் தந்தது. ரூதர்போர்டு (35), ஹோல்டர் (20) ஆறுதல் தர, ஹெட்மயர் 31 பந்தில் 52 ரன் எடுத்தார். மற்றவர்கள் ஏமாற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, 19.4 ஓவரில் 170 ரன்னில் ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலியாவின் திவார்ஷுயிஸ் 3, 100வது 'டி-20'ல் பங்கேற்ற ஜாம்பா 1 விக்கெட் சாய்த்தனர்.டேவிட் விளாசல்ஆஸ்திரேலிய அணிக்கு மேக்ஸ்வெல் (0), கேப்டன் மிட்சல் மார்ஷ் (14) ஜோடி சுமார் துவக்கம் தர, இங்லிஸ் (10), ஏமாற்றினார். டிம் டேவிட் 12 பந்தில் 30 ரன் எடுத்தார். கிரீன் (18ல் 32), ஓவன் (17ல் 37) தங்கள் பங்கிற்கு வேகமாக ரன் சேர்க்க, ஆஸ்திரேலியா 17 ஓவரில் 173/7 ரன் எடுத்து வெற்றி பெற்றது.