உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / இந்தியா ஏ ஏமாற்றம் * 6 விக்கெட்டில் தோல்வி

இந்தியா ஏ ஏமாற்றம் * 6 விக்கெட்டில் தோல்வி

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய 'ஏ' அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்டில், இந்தியா 'ஏ' அணி 6 விக்கெட்டில் தோல்வியடைந்தது.ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்தியா 'ஏ' அணி, இரண்டு போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரில் (நான்கு நாள்) பங்கேற்றது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 'ஏ' வென்றது. இரண்டாவது போட்டி மெல்போர்னில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 'ஏ' 161, ஆஸ்திரேலியா 'ஏ' 223 ரன் எடுத்தன. இரண்டாவது நாள் முடிவில் இந்திய 'ஏ' அணி இரண்டாவது இன்னிங்சில் 73/5 ரன் எடுத்திருந்தது. துருவ் ஜுரல் (19), நிதிஷ் குமார் (9) அவுட்டாகாமல் இருந்தனர்.ஜுரல் அரைசதம்நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. துருவ் ஜுரல் அரைசதம் கடந்தார். ஆறாவது விக்கெட்டுக்கு 94 ரன் சேர்த்த போது, ஜுரல் (68) அவுட்டானார். நிதிஷ் குமார் 38 ரன் எடுத்து திரும்பினார். பின் வரிசையில் பிரசித் கிருஷ்ணா 29 ரன், தனுஷ் கொடியன் 44 ரன் எடுத்து கைகொடுத்தனர். இந்திய 'ஏ' அணி இண்டாவது இன்னிங்சில் 229 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.எளிய வெற்றிபின் 168 ரன் எடுத்தால் வெற்றி என களமிறங்கியது ஆஸ்திரேலிய 'ஏ'. பிரசித் கிருஷ்ணா வீசிய முதல் ஓவரில் 2, 3வது பந்தில் மார்கஸ் (0), பான்கிராப்ட் (0) 'டக்' அவுட்டாகினர். கேப்டன் நாதன் (25), ஆலிவர் (21) நிலைக்கவில்லை. பின் இணைந்த கொன்ஸ்டாஸ் (73), வெப்ஸ்டர் (46) அவுட்டாகாமல் இருந்து, அணியை வெற்றி பெறச் செய்தனர். ஆஸ்திரேலிய 'ஏ' அணி 169/4 ரன் எடுத்து, 6 விக்கெட்டில் வெற்றி பெற்றது. தொடரை 2-0 என கைப்பற்றியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ