உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / விடைபெறுகிறார் சூப்பர்மேன் சகா * ரஞ்சி கோப்பை தொடருடன்...

விடைபெறுகிறார் சூப்பர்மேன் சகா * ரஞ்சி கோப்பை தொடருடன்...

புதுடில்லி: விக்கெட் கீப்பர் சகா, நடப்பு ரஞ்சி கோப்பை தொடருடன் ஓய்வு பெற உள்ளார்.இந்திய அணி விக்கெட் கீப்பர்/பேட்டர் விரிதிமன் சகா 40. மேற்குவங்கத்தை சேர்ந்த இவர், கடந்த 2010ல் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான, நாக்பூர் ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார். 40 டெஸ்ட் (1353 ரன், 92 கேட்ச், 12 ஸ்டம்பிங்), 9 ஒருநாள் (41 ரன், 17 கேட்ச், 1 ஸ்டம்பிங்) போட்டியில் பங்கேற்றார். இந்திய அணி கேப்டன், விக்கெட் கீப்பராக தோனி இருந்ததால், அதிக போட்டிகளில் சகா பங்கேற்க முடியவில்லை. முதல் டெஸ்டில் பங்கேற்று 2 ஆண்டுக்குப் பின் 2வது டெஸ்டில் களமிறங்கினார். அடுத்த 3 ஆண்டுக்குப் பின் தான் 3வது டெஸ்ட் வாய்ப்பு கிடைத்தது. கிர்மானி, மோங்கியா போல சிறந்த விக்கெட் கீப்பராக செயல்பட்ட இவர், 'மிடில் ஆர்டரில்' தேவையான ரன் எடுக்கவும் உதவினார். இந்திய ஆடுகளத்தில் அஷ்வின், ஜடேஜா என 'சீனியர்' சுழலை சந்திக்கவும், இஷாந்த் 'வேகத்தை' எதிர்கொள்ளவும் சரியான விக்கெட் கீப்பராக இருந்தார் சகா. அஷ்வின் சுழலில், தென் ஆப்ரிக்காவின் டுபிளசி அடித்த பந்தை அந்தரத்தில் தாவி, பறந்து சென்று 'கேட்ச்' செய்ய, சகா 'சூப்பர்மேன்' ஆனார். ரிஷாப் பன்ட் வருகைக்குப் பின் மீண்டும் சகா, ஒதுக்கப்பட்டார். கடந்த 2021ல் நியூசிலாந்துக்கு எதிராக வான்கடே டெஸ்டில் கடைசியாக பங்கேற்றார். தற்போது 40 வயதான நிலையில், நடப்பு ரஞ்சி கோப்பை தொடருடன் (2025, பிப்.-மார்ச்) ஓய்வு பெற உள்ளார்.அவர் கூறுகையில்,'' எனது கிரிக்கெட் பயணத்தின் கடைசி சீசன் இது. ஓய்வு பெறுவதற்கு முன் ரஞ்சி கோப்பை தொடரில் பெங்கால் அணிக்காக விளையாடுவதில் பெருமை கொள்கிறேன். என்றும் நினைவில் நிற்கும் வகையில் இந்த சீசனை மாற்ற முயற்சிப்பேன்,'' என்றார்.ஐந்து அணிஐ.பி.எல்., அரங்கில் கோல்கட்டா (2008-10), சென்னை (2011-13), பஞ்சாப் (2014-17), ஐதராபாத் (2018-21), குஜராத் (2022 முதல்) என ஐந்து அணிகளுக்காக விளையாடினார். 1 சதம், 13 அரைசதம் உட்பட 2934 ரன் எடுத்துள்ளார். 2014 பைனலில் 55 பந்தில் 115 ரன் விளாசினார். 18 ஆண்டுரஞ்சி கோப்பை தொடரில் 2007 முதல் விளையாடுகிறார். வரும் 2025, பிப்.,-மார்ச் உடன், தனது 18 ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து விடைபெற உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை