உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / டில்லியை வென்றது காஷ்மீர் * ரஞ்சி கோப்பை தொடரில்...

டில்லியை வென்றது காஷ்மீர் * ரஞ்சி கோப்பை தொடரில்...

புதுடில்லி: ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் ஜம்மு அண்டு காஷ்மீர் அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் டில்லியை வீழ்த்தியது.இந்தியாவில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் 91வது சீசன் நடக்கிறது. டில்லியில் நடந்த 'டி' பிரிவு லீக் போட்டியில் டில்லி, ஜம்மு அண்டு காஷ்மீர் அணிகள் மோதின. டில்லி அணி முதல் இன்னிங்சில் 211, காஷ்மீர் 310 ரன் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் டில்லி 277 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய காஷ்மீர் அணி, இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 179 ரன் எடுத்து, 7 விக்கெட்டில் வெறி பெற்றது. கம்ரான் இக்பால் 147 பந்தில் 133 ரன் எடுத்து வெற்றிக்கு கைகொடுத்தார்.நடப்பு சாம்பியன் விதர்பா, ஒடிசா அணிகள் மோதிய போட்டி நாக்பூரில் நடந்தது. இதில் விதர்பா அணி (286, 218/2), 100 ரன் வித்தியாசத்தில் ஒடிசா அணியை (160, 244) வென்றது. விதர்பா சார்பில் பார்த் 5, பிரபுல் 3 விக்கெட் சாய்த்தனர்.சூரத்தில் நடந்த போட்டியில் பெங்கால் அணி (474), ரயில்வேஸ் அணியை (222, 132) 120 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஐதராபாத்தில் நடந்த 'டி' பிரிவு போட்டியில் ஐதராபாத் (364, 244/9), ராஜஸ்தான் (269, 207/3) மோதின. நான்காவது நாளில் இப்போட்டி 'டிரா' ஆனது. 65 ஆண்டில்...டில்லி, ஜம்மு அண்டு காஷ்மீர் அணிகள் கடந்த 1960 முதல் 43 போட்டியில் மோதின. டில்லி 37ல் வென்றது. 65 ஆண்டு வரலாற்றில் முதன் முறையாக நேற்று காஷ்மீர் அணி, டில்லியை சாய்த்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ