வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஐ பி எல் ஏலம் புரியாத புதிர். நல்ல விளையாட்டு வீரர்களை ஒதுக்கி விடுகிறார்கள்.
இந்துார்: 'டி-20' அரங்கில் 28 பந்தில் சதம் விளாசி சாதித்தார் குஜராத் வீரர் உர்வில் படேல். இந்தியாவில் சையது முஷ்தாக் அலி டிராபி 'டி-20' தொடர் நடக்கிறது. இந்துாரில் நடந்த போட்டியில் குஜராத், திரிபுரா அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற குஜராத் பீல்டிங் தேர்வு செய்தது. திரிபுரா அணிக்கு ஸ்ரீதம் (57) அரைசதம் அடித்து உதவினார். கேப்டன் மன்தீப் சிங் (7) ஏமாற்ற, ஸ்ரீனிவாஸ் சரத் (29), அபிஜித் (15) சற்று உதவினர். திரிபுரா அணி 20 ஓவரில் 155/8 ரன் எடுத்தது. பின் களமிறங்கிய குஜராத் அணிக்கு ஆர்யா தேசாய், உர்வில் படேல் ஜோடி மின்னல் வேகத்தில் ரன் குவித்தது. சிக்சர் மழை பொழிந்த உர்வில், 28 வது பந்தில் சதம் விளாசி சாதித்தார். முதல் விக்கெட்டுக்கு 8.5 ஓவரில் 150 ரன் சேர்த்த போது, ஆர்யா (38) அவுட்டானார். பின் குஜராத் அணி 10.2 ஓவரில் 156/2 ரன் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. உர்வில் (35 பந்து, 113 ரன், 12x6, 7x4), உமாங் (1) அவுட்டாகாமல் இருந்தனர். முதல் இந்தியர்இந்திய 'டி-20' அரங்கில் குறைந்த பந்தில் சதம் விளாசிய வீரர் ஆனார் உர்வில் (28 பந்து). இதற்கு முன் டில்லி அணிக்காக ரிஷாப் பன்ட், 32 பந்தில் (எதிர்-இமாச்சல பிரதேசம், 2018) சதம் அடித்தது முதலிடத்தில் இருந்தது. * ஒட்டுமொத்த 'டி-20'ல் இது இரண்டாவது அதிவேக சதம் ஆனது. 27 பந்தில் சதம் அடித்த எஸ்தோனிய வீரர் சாஹில் சவுகான் (எதிர்-சைப்ரஸ், 2024) முதலிடத்தில் உள்ளார். * 'டாப்-4' வீரர்கள் விபரம்வீரர்/அணி எதிரணி ஆண்டு பந்துசாஹில்/எஸ்தோனியா சைப்ரஸ் 2024 27உர்வில்/குஜராத் திரிபுரா 2024 28கெய்ல்/பெங்களூரு புனே 2013 30ரிஷாப்/டில்லி இ.பி., 2018 32யாரும் வாங்கவில்லைஐ.பி.எல்., (2023) தொடரில் உர்வில் படேல் (ரூ. 20 லட்சம்) குஜராத் அணியில் இருந்தார். ஒரு போட்டியில் பங்கேற்காமல், விடுவிக்கப்பட்டார். மறுநாள் (2023, நவ. 27) நடந்த விஜய் ஹசாரே (50 ஓவர்) போட்டியில், 41 பந்தில் 100 ரன் (எதிர்-சண்டிகர்) அடித்து மிரட்டினார். இந்திய லிஸ்ட் ஏ போட்டியில் இது இரண்டாவது அதிவேக சதம் (யூசுப் பதான் முதலிடம், 40 பந்து, 2010) ஆனது.சமீபத்திய ஏலத்தில் விக்கெட் கீப்பர் பேட்டராக இடம் பெற்றிருந்தார். ஆனால் இவரது பெயர் ஏலத்தில் வரவே இல்லை. தற்போது, மீண்டும் நவ. 27ல் அதிவேக 'டி-20' சதம் அடித்த இந்தியர் ஆனார்.
ஐ பி எல் ஏலம் புரியாத புதிர். நல்ல விளையாட்டு வீரர்களை ஒதுக்கி விடுகிறார்கள்.