மேலும் செய்திகள்
இந்திய அணி 'நம்பர்-1': ஐ.சி.சி., தரவரிசையில்
05-May-2025
No 1 இடத்திற்கான போட்டி! MIvsGT
06-May-2025
No 1 இடத்தை பிடிக்குமா டெல்லி? DC vs KKR
29-Apr-2025
துபாய்: ஒருநாள் பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா 'நம்பர்-2' இடம் பிடித்தார்.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியானது. பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா, 727 புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருந்து 'நம்பர்-2' இடத்துக்கு முன்னேறினார். முதலிடத்தில் தென் ஆப்ரிக்காவின் லாரா (738) உள்ளார். இங்கிலாந்தின் நடாலியே சிவர் (725) 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ஒருநாள் பவுலர்கள் தரவரிசையில் இங்கிலாந்தின் சோபி (770) முதலிடத்தில் தொடர்கிறார். இந்தியாவின் தீப்தி சர்மா (672) 4வது இடத்தில் நீடிக்கிறார். முத்தரப்பு தொடரில் அதிக விக்கெட் (15) சாய்த்த இந்தியாவின் ஸ்னே ராணா (440), 4 இடம் முந்தி, 34வது இடத்தில் உள்ளார்.
05-May-2025
06-May-2025
29-Apr-2025