மேலும் செய்திகள்
அல்டிமேட் டேபிள் டென்னிஸ் எப்போது
16-May-2025
துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் பெண்களுக்கான உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இதன் 13 வது சீசன் வரும் செப்டம்பர் 30ல் இந்தியாவில் துவங்குகிறது. 1978, 1997, 2013க்குப் பின் நான்காவது முறையாக இந்தியாவில் இத்தொடர் நடக்கவுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா உட்பட 8 அணிகள் பங்கேற்க உள்ளன. போட்டிகள் அனைத்தும் லீக் முறையில் நடக்கவுள்ளன. இதன் படி ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதும். இப்போட்டியில் இந்தியா, இலங்கையில் நடக்க உள்ளன. லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் 'டாப்-4' இடம் பெறும் அணிகள், அரையிறுதிக்கு முன்னேறும். முதல் அரையிறுதி அக். 29ல் கவுகாத்தி அல்லது கொழும்புவில் நடக்கும். இரண்டாவது அரையிறுதி பெங்களூருவில் அக். 30ல் நடக்கும். பைனல் நவ. 2ல் பெங்களூரு அல்லது கொழும்புவில் நடக்கும்.இந்திய அணிக்கு ஹர்மன்பிரீத் கவுர் கேப்டனாக களமிறங்குகிறார். பெங்களூருவில், செப் 30ல் நடக்கும் முதல் போட்டியில், இந்திய அணி களமிறங்குகிறது.
16-May-2025