| ADDED : செப் 10, 2026 10:05 PM
பர்மிங்காம்: மூன்றாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றது.இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் விளையாடும் 3வது டெஸ்ட் பர்மிங்காமில் நடக்கிறது. பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 133 ரன் எடுத்தது. முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 156/4 ரன் எடுத்திருந்தது.\இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஹாரி புரூக் (75) 'ரன்-அவுட்' ஆனார். டான் லாரன்ஸ் அரைசதம் விளாசினார். இவர், 65 ரன்னில் ஆட்டமிழந்தார். அட்கின்சன் (19) நிலைக்கவில்லை. ஜேமி ஸ்மித், 69 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த ராபின்சன், 47 பந்தில், 50 ரன் (1X6, 7X4) விளாசினார்.இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 453 ரன்னுக்கு 'ஆல்-அவுட்டாகி', 320 ரன் முன்னிலை பெற்றது. ஆர்ச்சர் (32) அவுட்டாகாமல் இருந்தார். பின் 2வது இன்னிங்சை துவக்கிய பாகிஸ்தான் அணிக்கு ராபின்சன் தொல்லை தந்தார். இவர் வீசிய முதல் ஓவரில் சைம் அயுப், அப்துல்லா ஷபிக் 'டக்-அவுட்' ஆகினர். பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் 52/2 ரன் எடுத்திருந்த போது மழையால் 2ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அசான் அவைஸ் (29), ஷான் மசோத் (21) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்து சார்பில் ராபின்சன் 2 விக்கெட் வீழ்த்தினார்.