உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / ஹாரி புரூக், ஜோ ரூட் சாதனை

ஹாரி புரூக், ஜோ ரூட் சாதனை

மூன்றாவது அதிவேகம்டெஸ்டில் இந்தியாவுக்கு எதிராக அதிவேக சதம் அடித்த மூன்றாவது இங்கிலாந்து வீரரானார் ஹாரி புரூக் (91 பந்து). முதல் இரு இடங்களில் ஜேமி ஸ்மித் (80 பந்து), டக்கெட் (88 பந்து) உள்ளனர். * குறைந்த இன்னிங்சில் 10 சதம் அடித்தவர் பட்டியலில் புரூக் 9வது இடத்தில் (50 இன்னிங்ஸ்) உள்ளார். முதலிடத்தில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் பிராட்மேன்(23 இன்னிங்ஸ்) உள்ளார்.195 ரன்ஜோ ரூட்-ஹாரி புரூக் சேர்ந்து 4வது விக்கெட்டுக்கு 195 ரன் சேர்த்தனர். இது நான்காவது இன்னிங்சில் இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து சார்பில் எடுக்கப்பட்ட 2வது அதிகபட்ச ரன். இதற்கு முன் 2002ல் எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் ஜோ ரூட்-பேர்ஸ்டோவ் சேர்ந்து 269 ரன் சேர்த்ததே அதிகம். 6000 ரன்உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அரங்கில் 6000 ரன் (69 போட்டி) எடுத்த முதல் வீரர் என சாதனை படைத்தார் இங்கிலாந்தின் ஜோ ரூட். அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் (4278 ரன், 55 போட்டி) உள்ளார்.* டெஸ்ட் தொடர்களில் இந்தியாவுக்கு எதிராக அதிக முறை 500 ரன்+ (3 முறை) எடுத்த வீரரானார் ஜோ ரூட். * சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் ஒரு அணிக்கு எதிராக அதிக முறை 50+ ரன் எடுத்தவரில் இரண்டாவது இடத்தை ஹெர்பி டெய்லர் (தெ.ஆ., எதிர், இங்கி.,) ஜோ ரூட் (எதிர், இந்தியா) பகிர்ந்து கொண்டார். இருவரும் தலா 16 முறை 50+ ரன் எடுத்துள்ளனர். முதலிடத்தில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் பிராட்மேன் (17 முறை, எதிர் இங்கி.,) உள்ளார்.39வது சதம்டெஸ்டில் அதிக சதம் அடித்தவர் பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறினார் ஜோ ரூட் (39 சதம்). முதல் மூன்று இடங்களில் சச்சின் (இந்தியா, 51), காலிஸ் (தெ.ஆ., 45), பாண்டிங் (ஆஸி., 41) உள்ளனர்.* டெஸ்டில் ஒரு அணிக்கு எதிராக அதிக சதம் அடித்தவர்களில் 2வது இடத்தை கவாஸ்கர் (இந்தியா, எதிர், வெ.இ.,), உடன் ரூட் (எதிர், இந்தியா) பகிர்ந்து கொண்டார். இருவரும் 13 சதம் அடித்துள்ளனர். முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் பிராட்மேன் (19, எதிர், இங்கிலாந்து) உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !