உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / இந்தியா ஏ அணி டிரா: டெஸ்ட் தொடர் சமன்

இந்தியா ஏ அணி டிரா: டெஸ்ட் தொடர் சமன்

நார்தாம்ப்டன்: இந்தியா 'ஏ', இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் மோதிய 2வது டெஸ்ட் 'டிரா' ஆனது. தொடர் சமன் ஆனது.இங்கிலாந்து சென்றுள்ள இந்தியா 'ஏ' அணி, இரண்டு போட்டிகள் (4 நாள்) கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து லயன்ஸ் அணியுடன் விளையாடியது. முதல் போட்டி 'டிரா' ஆனது. நார்தாம்ப்டனில் 2வது டெஸ்ட் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 'ஏ' 348, இங்கிலாந்து லயன்ஸ் 327 ரன் எடுத்தன. மூன்றாம் நாள் முடிவில் இந்தியா 'ஏ' அணி 2வது இன்னிங்சில் 163/4 ரன் எடுத்திருந்தது.நான்காம் நாள் ஆட்டத்தில் துருவ் ஜுரெல் (28), நிதிஷ் குமார் ரெட்டி (42), ஷர்துல் தாகூர் (34) ஓரளவு கைகொடுத்தனர். பின் இணைந்த தனுஷ் கோடியன், அன்ஷுல் கம்போஜ் ஜோடி நம்பிக்கை தந்தது. மெக்கின்னி பந்தை பவுண்டரிக்கு விரட்டிய தனுஷ், 60 பந்தில் அரைசதம் கடந்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த கம்போஜ், அரைசதம் எட்டினார்.இந்தியா 'ஏ' அணி 2வது இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 417 ரன் எடுத்து 'டிக்ளேர்' செய்தது. தனுஷ் (90), கம்போஜ் (51) அவுட்டாகாமல் இருந்தனர்.பின், 439 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து லயன்ஸ் அணி 2வது இன்னிங்சில், 32/3 ரன் எடுத்திருந்த போது கடைசி நாள் ஆட்டத்தை முடித்துக் கொள்ள இரு அணி கேப்டன்களும் சம்மதம் தெரிவித்தனர். இதனையடுத்து போட்டி 'டிரா' ஆனது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை