உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / இந்திய அணியின் ஜெர்சி: பாகிஸ்தான் எதிர்ப்பு

இந்திய அணியின் ஜெர்சி: பாகிஸ்தான் எதிர்ப்பு

புதுடில்லி: சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியின் ஜெர்சிக்கு, பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி (பிப். 19-மார்ச் 9) நடக்கவுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி, பாகிஸ்தான் செல்ல மறுத்தது. இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடக்க உள்ளது. துவக்க விழாவில் பங்கேற்க கேப்டன் ரோகித் சர்மாவை, பாகிஸ்தான் அனுப்ப, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) மறுத்தது.தற்போது இந்திய அணியின் 'ஜெர்சி'யால் சர்ச்சை எழுந்துள்ளது. ஐ.சி.சி., நடத்தும் தொடர்களின் போது வீரர்கள் அணியும் 'ஜெர்சியில்' லோகோ, போட்டியை நடத்திடும் நாடுகளின் பெயர் இடம் பெற்றிருக்கும். ஆனால் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியின் 'ஜெர்சி'யில் பாகிஸ்தான் பெயர் இடம் பெறவில்லை. இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் துபாயில் மட்டும் நடக்க இருப்பதால், பாகிஸ்தான் பெயரை சேர்க்கவில்லை என பி.சி.சி.ஐ., சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.,) ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து பி.சி.பி., அதிகாரி ஒருவர் கூறுகையில், ''கிரிக்கெட்டில் பி.சி.சி.ஐ., அரசியலை புகுத்துகிறது. இது விளையாட்டுக்கு நல்லதல்ல. முதலில் பாகிஸ்தானில் விளையாட மறுத்தது. பின், துவக்க விழாவுக்கு கேப்டனை அனுப்ப முடியாது என்றது. தற்போது ஜெர்சியில் போட்டியை நடத்தும் நாட்டின் பெயரை சேர்க்கவில்லை. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) உடனடியாக தலையிட்டு இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ