உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / கோல்கட்டா அணி கலக்கல் ஆட்டம் * வீழ்ந்தது டில்லி அணி

கோல்கட்டா அணி கலக்கல் ஆட்டம் * வீழ்ந்தது டில்லி அணி

புதுடில்லி: பிரிமியர் போட்டியில் கோல்கட்டா அணி, 14 ரன்னில் டில்லியை வீழ்த்தியது. டில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று நடந்த பிரிமியர் லீக் போட்டியில் டில்லி, கோல்கட்டா அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற டில்லி அணி கேப்டன் அக்சர் படேல், பீல்டிங் தேர்வு செய்தார். கோல்கட்டா அணிக்கு ரஹ்மானுல்லா குர்பாஸ், சுனில் நரைன் ஜோடி துவக்கம் கொடுத்தது. மிட்சல் ஸ்டார்க் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய குர்பாஸ், கடைசி பந்திலும் பவுண்டரி அடித்தார். மறுபக்கம் சமீரா பந்தில் சிக்சர் அடித்து தன் பங்கிற்கு ரன் கணக்கைத் துவக்கினார் நரைன். தொடர்ந்து 3, 4 வது பந்திலும் 4, 6 என விளாசினார். இரண்டாவது ஓவரில் கோல்கட்டா அணிக்கு 25 ரன் கிடைத்தன. மீண்டும் வந்த ஸ்டார்க் ஓவரில் ரன் மழை பொழிந்தார் குர்பாஸ். 4, 4, 6 என அடித்த குர்பாசை (26), கடைசி பந்தில் அவுட்டாக்கி அனுப்பி வைத்தார் ஸ்டார்க். நரைனுடன் இணைந்த கேப்டன் ரஹானே, ஸ்டார்க் வீசிய போட்டியின் 5 வது ஓவரில் தலா ஒரு சிக்சர், பவுண்டரி அடித்தார். தொடர்ந்து முகேஷ் குமார் ஓவரிலும் 2 பவுண்டரி அடிக்க, கோல்கட்டா அணி 'பவர் பிளே' ஓவரில் (முதல் 6), 79/1 ரன் குவித்தது. இந்நிலையில் 16 பந்தில் 27 ரன் எடுத்த நரைன், விப்ராஜ் பந்தில் வீழ்ந்தார். அக்சர் 'இரண்டு'மறுபக்கம் அக்சர் படேல் சுழலில், ரஹானே (26 ரன், 14 பந்து), வெங்கடேஷ் (7) வீழ்ந்தனர். 32 பந்தில் 44 ரன் எடுத்த போது, ரகுவன்ஷி அவுட்டானார். ரிங்கு சிங் தனது பங்கிற்கு 36 ரன் (25 பந்து) எடுத்தார். ஸ்டார்க் வீசிய கடைசி ஓவரின் 3, 4வது பந்தில் பாவெல் (5), அன்குல் ராய் (0) அவுட்டாகினர். 5வது பந்தில் ரசல் (17) ரன் அவுட்டானார். கோல்கட்டா அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 204 ரன் குவித்தது. டில்லி சார்பில் ஸ்டார்க் 3, அக்சர், விப்ராஜ் தலா 2 விக்கெட் சாய்த்தனர். டுபிளசி அரைசதம்கடின இலக்கைத் துரத்திய டில்லி அணிக்கு அபிஷேக் போரல் (4), கருண் நாயர் (15) 'ஷாக்' கொடுத்தனர். ராகுல் (7) ரன் அவுட்டானார். டுபிளசி, அக்சர் படேல் இணைந்து அணியை மீட்டனர். டுபிளசி அரைசதம் அடித்தார். கோல்கட்டா தரப்பில் சுழலில் மிரட்டினார் நரைன். முதலில் அக்சர் படேல் (43), அடுத்து ஸ்டப்ஸ் (1) என இருவரையும் நரைன் திருப்பி அனுப்பினார். அரைசதம் அடித்த டுபிளசியும் (62) இவரது வலையில் சிக்கினார். 18 வது ஓவரை வீசிய வருண் சக்ரவர்த்தி, அஷுதோஷ் (7), ஸ்டார்க்கை (0) அடுத்தடுத்த பந்தில் அவுட்டாக, டில்லி தோல்வி உறுதியானது. டில்லி அணி 20 ஓவரில் 190/9 ரன் எடுத்து தோல்வியடைந்தது. 150அஷுதோஷ் சர்மாவை அவுட்டாக்கிய கோல்கட்டா அணியின் வருண் சக்ரவர்த்தி, 'டி-20' அரங்கில் 150 விக்கெட் என்ற மைல்கல்லை எட்டினார். இதுவரை 116 போட்டியில் 151 விக்கெட் சாய்த்துள்ளார். 800 சிக்சர்நேற்று நரைன் பந்தில் அக்சர் படேல் சிக்சருக்கு அனுப்பினார். இது, நடப்பு பிரிமியர் தொடரில் பதிவான 800 வது சிக்சர் ஆனது. இதுவரை 48 போட்டியில், 804 சிக்சர் அடிக்கப்பட்டுள்ளன. முதன் முறைபிரிமியர் தொடரின் 18 வது சீசனில், கோல்கட்டா அணி முதல் விக்கெட்டுக்கு அதிகபட்சமாக நேற்று 48 ரன் சேர்த்தது. முன்னதாக சென்னை அணிக்கு எதிராக குயின்டன் டி காக், சுனில் நரைன் ஜோடி 46 ரன் எடுத்திருந்தது. * தவிர, இத்தொடரில் முதல் விக்கெட் ஜோடியாக ஒருமுறை கூட 50 ரன் எடுக்காத அணியாக கோல்கட்டா உள்ளது.6 சிக்சர்கோல்கட்டா துவக்க வீரர் சுனில் நரைன், துஷ்மந்தா சமீரா பந்தை சிக்சருக்கு அனுப்பி ரன் கணக்கைத் துவக்கினார். இதையடுத்து, பிரிமியர் போட்டியில், தான் சந்தித்த முதல் பந்தை, அதிக முறை சிக்சருக்கு அனுப்பிய சுழற்பந்து வீச்சாளர்களில் முதலிடத்தை சென்னையின் ஜடேஜா, குஜராத்தின் ரஷித் கானுடன் பகிர்ந்து கொண்டார் நரைன். மூவரும் தலா 6 முறை இதுபோல சிக்சர் அடித்தனர். இரண்டாவது அதிகம்டில்லி அணிக்கு எதிராக முதல் 6 ஓவரில் கோல்கட்டா அணி, 79/1 ரன் எடுத்தது. நடப்பு பிரிமியர் தொடரில் 'பவர்பிளே' ஓவரில் கோல்கட்டா எடுத்த இரண்டாவது அதிகபட்சம் இது. முன்னதாக லக்னோவுக்கு எதிராக 90 ரன் எடுத்திருந்தது. 142 ரன்கோல்கட்டா வீரர் வெங்கடேஷ் ஐயரின் மோசமான பார்ம் தொடர்கிறது. நேற்று 7 ரன்னில் அவுட்டான இவர், இதுவரை களமிறங்கிய 7 இன்னிங்சில் 142 ரன் மட்டும் (6, 3, 60, 45, 7, 14, 7) எடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி