உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / லக்னோ அணி வீரர்களுக்கு அபராதம்

லக்னோ அணி வீரர்களுக்கு அபராதம்

லக்னோ: தாமதமாக பந்துவீசியதால் கேப்டன் ரிஷாப் பன்ட் உள்ளிட்ட லக்னோ அணி வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.லக்னோவில் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் ரிஷாப் பன்ட் தலைமையிலான லக்னோ அணி (227/3), 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவிடம் (230/4) தோல்வியடைந்தது. இப்போட்டியில் லக்னோ அணியினர் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீச தவறினர். போட்டியில் தாமதமாக பந்துவீசுவது குற்றமாகும்.தவிர இது, மூன்றாவது முறை என்பதால் லக்னோ அணி கேப்டன் ரிஷாப் பன்ட்டிற்கு போட்டி சம்பளத்தில் இருந்து ரூ. 30 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது. 'இம்பாக்ட்' வீரர்கள் உட்பட மற்ற 'லெவன்' அணி வீரர்களுக்கு தலா ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ